/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாகனங்களை வாடகைக்கு எடுத்த அடமானம் வைத்து பல லட்சம் மோசடி குறிஞ்சிப்பாடியில் நான்கு பேர் கைது

ADDED : நவ 16, 2024 02:32 AM
குள்ளஞ்சாவடி: சரக்கு வாகனங்களை அடமானம் வைத்து பல லட்சம் மோசடி செய்த, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம், கிழக்கு தெருவை சேர்ந்தவர், சரவணன் மகன் சதீஷ்குமார், 26; குறிஞ்சிப்பாடி, பெரிய கண்ணாடியை சேர்ந்தவர் கவுதமன் , 34: இவர் சதீஷ்குமாருக்கு சொந்தமான அசோக் லேலண்ட்-தோஸ்த் சரக்கு வாகனத்தை, தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்துவதாக கூறி மாத வாடகைக்கு எடுத்துள்ளார். இவர் இது போன்று மேலும் 5 பேரிடம் வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளார்.
இந்நிலையில் கவுதமன் , வடலுார் ஆர்.சி ., தெருவை சேர்ந்த ஜான் விக்டர், 42, குறிஞ்சிப்பாடி, ஆடூர் கண்ணாடியை சேர்ந்த, சிவராஜ், 35, ஜி.என் குப்பம், ராணி தெருவை சேர்ந்த சிவராமன், 35, ஆகியோருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயார் செய்து, 6 தோஸ்த் வாகனங்களை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது பற்றி அறிந்த சதீஷ்குமார் உட்பட பாதிக்கப்பட்ட 6 பேர் கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து கவுதமன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.