ADDED : டிச 22, 2025 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் ஹரித்ரா ஹரி சகஸ்ர நாம அறக்கட்டளையின் 12ம் ஆண்டு விழா, சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவை முன்னிட்டு மாலை விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ர நாமம் கூட்டு பாராயணம் நடந்தது. தொடர்ந்து குத்துவிளக்கேற்றி விழா துவங்கியது. அறக்கட்டளை நிர்வாக தலைவர் முத்துவரதன் வரவேற்றார்.
சென்னை மோகன் குருஜி, ஸ்ரீலலிதாம்பிகை மகிமை என்ற பொருளில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகக்குழு உறுப்பினர் அப்பாஜி நன்றி கூறினார்.

