ADDED : டிச 08, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை பள்ளி தாளாளர் குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார். துணை தாளாளர் ரூபியால் ராணி, முதல்வர் லியோ பெஸ்கி ராவ் முன்னிலை வகித்தனர்.
அதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பல பிரிவுகளில் மாணவர்கள் செயல்பாட்டு மாதிரிகள், தொழில்நுட்பக்காட்சிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து காட்சிப்படுத்தினர். மேலும் பாரம்பரிய நடனம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளை காட்சிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.

