/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுபான காலி பா ட்டில்கள்: திரும்ப பெறும் திட்டம் அமல்
/
மதுபான காலி பா ட்டில்கள்: திரும்ப பெறும் திட்டம் அமல்
மதுபான காலி பா ட்டில்கள்: திரும்ப பெறும் திட்டம் அமல்
மதுபான காலி பா ட்டில்கள்: திரும்ப பெறும் திட்டம் அமல்
ADDED : டிச 22, 2025 04:41 AM
கடலுார்: மதுபான காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தி ல் டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகளில், மதுபான பாட்டில்களை வாங்கி சென்று அருந்திய பின் காலி பாட்டில்களை அதே கடைகளில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் சென்னை ஐகோர்ட் ஆணை படி, அ மலுக்கு வருகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்கள் மீது, கடை எண் குறிப்பிட்டு 10 ரூபாய் என அச்சிடப்பட்ட 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருக்கும். அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களையும் விற்பனை செய்யும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையுடன் கூடுதலாக சேர்த்து வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும்.
அவ்வாறு வாடிக்கையாளர்கள் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து வாங்கும் மதுபான பாட்டில்களை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக் கரோடு அதே கடைகளில் காலியாக திரும்ப ஒப்படைக்கும்போது ஏற்கனவே பெறப்பட்ட 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

