sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவர் உண்ணாவிரதம்: விருதையில் பரபரப்பு

/

முதியவர் உண்ணாவிரதம்: விருதையில் பரபரப்பு

முதியவர் உண்ணாவிரதம்: விருதையில் பரபரப்பு

முதியவர் உண்ணாவிரதம்: விருதையில் பரபரப்பு


ADDED : அக் 14, 2024 08:44 PM

Google News

ADDED : அக் 14, 2024 08:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : பராமரிக்காமல் கைவிட்ட மகன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு தரக் கோரி முதியவர் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு நிலவியது.

குறிஞ்சிப்பாடி அடுத்த கொளக்குடி வடிவேல் மகன் பழனி, 76. விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், 'விருத்தாசலம் அடுத்த வி.சாத்தமங்கலத்தில் விஜி செராமிக்ஸ் என்ற பெயரில் 1987ம் ஆண்டு முதல் 2012 வரை நடத்தி வந்தேன். கடலுார் மாவட்ட டேக்வாண்டோ அசோசியேஷன் துவக்கி, மாநில மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளை நடத்தி வந்தேன்.

உடல் நலக்குறைவு காரணமாக எனக்கு சொந்தமான நிலத்தில் தலா 66 சென்ட் நிலம் இரண்டு மகன்களுக்கும், மூத்த மகளுக்கு 8 சென்ட் நிலம் மற்றும் மாற்றுத்திறனாளியான இளைய மகளுக்கு 31 சென்ட் நிலமும் பாக பிரிவினை செய்து கொடுத்தேன். மேலும், கராத்தே போட்டி நடத்திய தொகை 60 ஆயிரம் ரூபாயை 2022ல் கொடுத்தேன்.

உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை, உணவு, பராமரிப்புக்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால் எனது மகன்கள் என்னை பராமரிக்காமல் கைவிட்டனர். இது தொடர்பாக கலெக்டரிடம் நேரில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் நான் கொடுத்த சொத்துக்களை தர வேண்டும்' என்றார்.

சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் வந்து, அவரது மகன்களை அழைத்து விசாரிப்பதாக கூறி, முதியவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us