/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம்: கலெக்டர் எச்சரிக்கை
/
நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம்: கலெக்டர் எச்சரிக்கை
நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம்: கலெக்டர் எச்சரிக்கை
நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம்: கலெக்டர் எச்சரிக்கை
ADDED : டிச 10, 2024 06:11 AM
கடலுார்; பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.
இதகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வடகிழக்கு பருவமழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதாலும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளதாலும் பொதுமக்கள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஆற்றில் தரைப் பாலங்களை கடந்து செல்லக் கூடாது. இளைஞர்கள் ஆபத்தை உணராமல் நீர்நிலைகளின் அருகே செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு அருகில் மேய்ச்சலுக்காகவும், குளிப்பாட்டவும் கொண்டு செல்லக்கூடாது.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அருகே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.