/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க.,வை விரட்ட வேண்டும்: 'மாஜி' அமைச்சர் சம்பத் பேச்சு
/
தி.மு.க.,வை விரட்ட வேண்டும்: 'மாஜி' அமைச்சர் சம்பத் பேச்சு
தி.மு.க.,வை விரட்ட வேண்டும்: 'மாஜி' அமைச்சர் சம்பத் பேச்சு
தி.மு.க.,வை விரட்ட வேண்டும்: 'மாஜி' அமைச்சர் சம்பத் பேச்சு
ADDED : ஏப் 05, 2025 05:36 AM

கடலுார்;
தி.மு.க., வை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டுமென, முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினர்.
கடலுாரில் முதுநகர் அ.தி.மு.க., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. பகுதி செயலாளர் கந்தன் தலைமை தாங்கினார்.
அவைத் தலைவர் குமார், மருத்துவர் அணி சீனுவாசராஜா, துணை செயலாளர் பக்கிரி முன்னிலை வகித்தனர்.
கடலுார் வடக்கு மாவட்ட பூத் கமிட்டிக்கான ஆய்வு பணிக்கு பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில், 'பூத் கமிட்டி அமைக்கும் பணியை சிறப்பாக கழகத்திற்கு விசுவாசமானவர்களை கொண்டு அமைத்து விட்டால் எளிதாக தேர்தலை எதிர்கொள்ளலாம்.
புதிய வாக்காளர்களை ஜனவரி மாதத்தில் சேர்க்க வேண்டும். கடந்த 4 ஆண்டு கால விடியா தி.மு.க., ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை.
ஆனால், 4 லட்சம் கோடி ருபாய்க்கு மேல் கடன் வாங்கி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட அத்தனை திட்டங்களையும் தி.மு.க., அரசு நிறுத்தியுள்ளது.
தி.மு.க., ஆட்சியை விரட்ட வேண்டும். 2026 தேர்தலில் அ.தி.மு.க, ஆட்சியில் அமர நிர்வாகிகள் பாடுபட வேண்டும்' என்றார்.

