/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் தி.மு.க., நிர்வாகிகள்
/
படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் தி.மு.க., நிர்வாகிகள்
படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் தி.மு.க., நிர்வாகிகள்
படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் தி.மு.க., நிர்வாகிகள்
ADDED : பிப் 27, 2024 11:52 PM
லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளதையொட்டி ஆளுங்கட்சி தி.மு.க., அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதையொட்டி சிதம்பரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், வார்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கு ஆதரவாக எவ்வளவு ஓட்டு கிடைக்கும். அவ்வாறு இல்லாத குடும்பத்தினரை அணுகி தங்களுக்கு ஓட்டு போடும்படி கேன்வாஸ் செய்வதற்கும் வசதியாக ஒரு படிவத்தை கட்சியினர் பொதுமக்களிடம் வழங்குகின்றனர்.
அந்த படிவத்தில் குடும்ப தலைவர் பெயர், தொலைபேசி எண், பூத் எண், மகளிர் உரிமைத் தொகை கிடைத்துள்ளதா, முதியோர் ஓய்வூதியம் பெறுகின்றனரா, குடும்பத்தில் யாரேனும் அரசு பணியில் உள்ளனரா என்ற கேள்விகள் அடங்கிய படிவத்தை பொதுமக்களிடம் கொடுத்து பூர்த்தி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் எந்த பதிலையும் அளிக்காமல், 'நீங்களே பதிலை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்' என தெரிவித்து படிவத்தை கட்சியினரிடமே திருப்பிக் கொடுத்ததால், படிவத்தை எப்படி பூர்த்தி செய்து மாவட்ட கட்சி தலைமைக்கு அனுப்புவது என தெரியாமல் பொறுப்பாளர்கள் குழம்பியுள்ளனர்.
இதனால், மாற்று ஏற்பாடாக ரேஷன் கடைகளில் உள்ள பதிவேடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் விபரம் மற்றும் குடும்ப அட்டை எண், மொபைல் போன் எண்களை தெரிந்து கொண்டு விண்ணப்ப படிவத்தை தங்களுக்கு தெரிந்த அளவு பூர்த்தி செய்யும் பணியில் பொறுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

