ADDED : மார் 17, 2026 04:54 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழங்குடியினர் இருளர் பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு தலைமை தாங்கினார். அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார், ஆதிமூலம் முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், துணை மேயர் தாமரைச்செல்வன், மா.கம்யூ., மாநகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூ., வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கண்டன உரையாற்றினர். எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சுப்ரமணி நன்றி கூறினார்.
