/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்டேட் பேங்க் சார்பில் வாடிக்கையாளர் கூட்டம்
/
ஸ்டேட் பேங்க் சார்பில் வாடிக்கையாளர் கூட்டம்
ADDED : நவ 29, 2024 04:49 AM

கடலுார்: கடலுார் ஸ்டேட் பேங்க் சார்பில் வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம் கடலுார் தனியார் ஓட்டலில் நடந்தது.
கடலுார் முதுநகர் கிளை, திருப்பாதிரிப்புலியூர் கிளை, மஞ்சக்குப்பம் கிளை ஒருங்கிணைந்து வாடிக்கையாளர்கள் கூட்டத்தை நடத்தியது.
இக்கூட்டத்திற்கு புதுச்சேரி மண்டல அலுவலர் சதீஷ்பாபு தலைமை தாங்கினார்.
மஞ்சக்குப்பம் முதன்மை மேலாளர் சரவணன் வரவேற்றார்.
முதன்மை மேலாளர்கள் லட்சுமணன்ராவ், பரணிதரன், கடலுார் முதுநகர் கிளை முதன்மை மேலாளர் பிரபாகரன் முன்னிலை, வகித்தனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.
ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் பேசும்போது, இணையவழி குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு, யோனோ இன்டர்நெட் பாங்க்கிங் பயன்பாடு, வாட்ஸப் பேங்க்கிங் பற்றியும் எடுத்துக்கூறினர்.
திருப்பாதிரிப்புலியூர் முதன்மை மேலாளர் ஸ்ரீராம்குமார் நன்றி கூறினார்.

