/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேட்டி, சேலையில் குழப்பமோ.. குழப்பம்...
/
வேட்டி, சேலையில் குழப்பமோ.. குழப்பம்...
ADDED : ஜன 17, 2024 08:37 AM
தமிழகத்தில், பொங்கலையொட்டி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.
பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஏ.ஏ.ஒய்.,-பி.ெஹச்.ெஹச்.,-என்.பி.ெஹச்.ெஹச்., போன்ற வகை கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. ஆனால், கடலுார் உள்ளிட்ட சில இடங்களில் என்.பி.ெஹச்.ெஹச்., வகை கார்டுதாரர்களுக்கு வேட்டி, சேலை மட்டும் வழங்காததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ரேஷன் கடையிலும், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடைகாரர் கூறுகையில், ' கார்டு எண்ணிக்கைக்கேற்ப வேட்டி, சேலையை அதிகாரிகள் அனுப்பவில்லை. இதனால், அனைவருக்கும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர். இந்த விபரம் பலருக்கும் புரியாமல், ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 'களேபரம் 'நடந்தது.

