நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியுடன், அதனையொட்டி அமைந்துள்ள பெரியாக்குறிச்சி ஊராட்சியை, இணைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
அதையொட்டி நேற்று பெரியாக்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, ஊராட்சியின் பரப்பளவு, எல்லை அமைந்துள்ள விபரம் குறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது ஆர்.டி.ஓ., சையத்மெஹ்மூத், தாசில்தார் உதயகுமார், பேரூராட்சி உதவி இயக்குநர் வெங்கடேசன், செயல் அலுவலர் சண்முக சுந்தரி, பி,டி.ஓ.,க்கள் சங்கர், குமரன் உட்பட பலர் உடனிருந்தனர்

