sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அதிகாரப்பூர்வ ஆள் சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே வெளிநாடு செல்ல வேண்டும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்

/

அதிகாரப்பூர்வ ஆள் சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே வெளிநாடு செல்ல வேண்டும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்

அதிகாரப்பூர்வ ஆள் சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே வெளிநாடு செல்ல வேண்டும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்

அதிகாரப்பூர்வ ஆள் சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே வெளிநாடு செல்ல வேண்டும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்


ADDED : ஜூலை 27, 2025 11:20 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வெளிநாடு வேலைக்கு திகார ப்பூர்வ ஆள் சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

அவரது செய்திக் குறிப்பு:

வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது.

வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் (https://cMigrate.gov.in) ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில், முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீர்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்து கொள்வது அவசியம். வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும்.

வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம் பெறுகின்றன.

வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாசாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம், முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக் கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாக கருதப்படும்.

வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ள, இந்தியாவில் இருந்து 1800 309 3793 என்ற எண்ணிற்கும், வெளிநாடுகளிலிருந்து 080 6900 9900, 080 6900 9901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us