/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மா.உடையூர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
/
மா.உடையூர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 23, 2025 04:04 AM

சிதம்பரம்: சிதம்பரம் டெம்பிள் சிட்டி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி கட்டடம் பழுது நீக்கி ஒப்படைக்கப்பட்டது.
குமராட்சி அடுத்த மா. உடையூர் கிராமத்தில் டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டடம் பழுதடைந்து மோசமானது. தொடர்ந்து, சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், உடனடி துணை ஆளுநர் திருஞானசம்பந்தம் சார்பில், பள்ளி கட்டடம் சீரமைக்கப்பட்டு, ஒப்படைக்கும் நிகழ்வு மற்றும் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
பள்ளியில் நடந்த விழாவிற்கு, சங்க முன்னாள் தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஜெயகுமாரி பால்சன் வரவேற்றார்.
துணை ஆளுநர் புகழேந்தி பேசினார். மண்டல செயலாளர் கலைச்செல்வன் மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கினார். நிகழ்வில் ஆசிரியர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் முருகேசு நன்றி கூறினார்.

