/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்ட பணிகள் சேர்மன் துவக்கி வைப்பு
/
வளர்ச்சி திட்ட பணிகள் சேர்மன் துவக்கி வைப்பு
ADDED : நவ 17, 2024 02:45 AM
ராமநத்தம்: ஆவட்டி அருகே பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மங்களூர் ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தார்.
ஆவட்டி அடுத்த ம.புடையூர் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன் கடை, இடுகாட்டில் காத்திருப்போர் கூடம், விழா மேடை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ம.புடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோழபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை துவக்க நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சி தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
மேலும், ம.புடையூர் ஊராட்சியில் இடுகாடு காத்திருப்போர் கூடம் மற்றும் விழா மேடை கட்டுமான பணிகளை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.
இதில், ம.புடையூர் வேளாண் கூட்டுறவு வங்கி செயலர் தமிழரசன், ஊராட்சி துணை தலைவர் லதா சரவணன், தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடேசன், அழகுசாமி, ராமதாஸ், வி.சி., நிர்வாகி காசி கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

