/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதியவருக்கு வெட்டு 3 பேர் மீது வழக்கு
/
முதியவருக்கு வெட்டு 3 பேர் மீது வழக்கு
ADDED : செப் 16, 2025 03:28 AM
குள்ளஞ்சாவடி : முதியவரை கத்தியால் வெட்டிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன், 60; நேற்று முன்தினம் அதே பகுதியில் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு சென்றார். அப்போது, வடக்கு பள்ளிநீரோடை சந்தோஷ்குமார், எள்ளுக்கால் வாய்க்கால் பகுதி சாருக்கான், சஞ்சய் ஆகியோர் தேங்காய் பறித்தனர். இதனை ராமநாதன், அணுக்கம்பட்டு ஏழுமலை, 70; தட்டிக் கேட்டனர்.
ஆத்திரமடைந்த 3 பேரும், ஏழுமலையை கத்தியால் வெட்டினார். காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், சந்தோஷ்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.