/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரு தரப்பு புகார் 25 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பு புகார் 25 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 28, 2025 05:57 AM
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே இருதரப்பு புகார்களின் பேரில், 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த கவனையை சேர்ந்தவர் காசிவேல் மனைவி விஜயா, 45. செல்வராஜ் மனைவி கண்ணம்மாள், 55. இரு குடும்பத்தினருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. கடந்த 26ம் தேதி இரவு அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதில், இருதரப்பினரும் ஆதரவாளர்களுடன் மோதிக் கொண்டனர்.
அதில், விஜயா, சக்திவேல் மற்றும் கண்ணம்மாள், தனலட்சுமி ஆகியோர் காயமடைந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து விஜயா, கண்ணம்மாள் ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில், இருதரப்பை சேர்ந்த 25 பேர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர். இதில், ரவி,31; தமிழ்வாணன், 37; ஆகியோரை கைது செய்தனர்.

