/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அருகே கார் மோதி, டிராக்டர் கவிழ்ந்து விபத்து சாலையில் சிதறிய கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதி

ADDED : ஆக 08, 2025 02:39 AM

கடலுார்: கடலுார் முதுநகர் அருகே கார் மோதி, டிராக்டர் கவிழ்ந்ததில் டிரைவர் காயமடைந்தார். தொடர் விபத்தை தவிர்க்க, டாரஸ் லாரி பிரேக் போட்டதில், சாலையில் கொட்டிய தொழிற்சாலை கழிவுகளால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கடலுார் முதுநகர், சங்கொலிக்குப்பம் அருகே சிமெண்ட் மூட்டை இறக்கிவிட்டு டிராக்டர் (டி.என்31-சி.இ 6421) ஒன்று கடலுார் நோக்கி நேற்று வந்தது. சங்கொலிக்குப்பம் தரைப்பாலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த டி.என்32-பி.இ0003 பதிவெண் கொண்ட கியா கார், டிராக்டரின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில், காரின் முன்பகுதி நொறுங்கியது. மேலும், கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையின் பக்கவாட்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டரை ஓட்டிவந்த தியாகவல்லி கிராமத்தை சேர்ந்த செந்தாமரைக்கண்ணன், 65; காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின்போது காருக்கு பின்னால் வந்த, தொழிற்சாலை கழிவு ஏற்றிய டாராஸ் லாரியின் டிரைவர், கார் மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டார். அப்போது, லாரியில் இருந்த தொழிற்சாலை கழிவுகள் சாலையில் கொட்டியது. அந்த கழிவு பொருள் வழுவழுப்பாக இருந்ததால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். உடன், அங்கிருந்த மக்கள், சாலையில் கொட்டிய கழிவின் மீது செம்மண் கொட்டி வழுவழுப்பை குறைத்தனர்.
இதுகுறித்து தகவலின்பேரில் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சாலையை சுத்தம் செய்தனர். விபத்து குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.