/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வணிக வைசிய சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
வணிக வைசிய சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : டிச 19, 2025 06:30 AM

கடலுார்: கடலுாரில், திருப்பாதிரிப்புலியூர் வணிக வைசிய சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
தலைவராக சுவாமிநாதன், செயலாளராக ரவிக்குமார், பொருளாளர்களாக பாலாஜி, மோகன், நிர்வாக உறுப்பினர்களாக சண்முகசுந்தரம், கோபாலகிருஷ்ணன், பழனிசாமி, நடராஜன், திருஞானசம்பந்த மூர்த்தி, விஜயகுமார், ஆனந்தன், முருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
சங்க தேர்தல் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி ஏற்பாட்டின் பேரில், சங்க தேர்தல் ஆணையர் சிவராமகிருஷ்ணன், புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, சான்றிதழ் வழங்கினார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், சங்கத்தின் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

