/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
/
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
ADDED : டிச 16, 2025 04:06 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணிபுரியும் 115 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்க 3 வருடத்துக்கு, ரூ. 30 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது.
காலை உணவு வழங்கும் திட்டத்தை கமிஷ்னர் கிருஷ்ணராஜன் நேற்று துவக்கி வைத்தார். இதற்காக 5 இடங்களில் உணவு தயாராக இருக்கும். துாய்மை பணியாளர்கள் அங்கு சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். உணவு அளிக்கும் டெண்டரில் உணவு டெலிவரிக்கும் பணம் சேர்த்து வழங்குவதால், துாய்மை பணியாளர்கள் வேலை செய்யும் இடத்திலேயே உணவு வழங்கவும், உணவு தரமாக இருந்ததை போல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என துாய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

