/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி நரசிம்மர் கோவிலில் 3ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்
/
லட்சுமி நரசிம்மர் கோவிலில் 3ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்
லட்சுமி நரசிம்மர் கோவிலில் 3ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்
லட்சுமி நரசிம்மர் கோவிலில் 3ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : ஏப் 30, 2025 07:20 AM
கடலுார்; சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா வரும் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடலுார் அடுத்த சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 3ம் தேதி காலை 4:30மணிக்கு மேல் 6:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தினசரி காலை பல்லக்கில் சாமி வீதியுலா, இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 7ம் தேதி இரவு கருட சேவை நடக்கிறது. 10ம் தேதி காலை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதியுலா, இரவு குதிரை வாகனம் பரிவேட்டை விழா நடக்கிறது.
11ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 12ம் தேதி மட்டையடி உற்சவம், 13ம் தேதி புஷ்ப யாகம், 14ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வேல்விழி மற்றும் சிங்கிரிகுடி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.