/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாகிஸ்தானியரை வௌியேற்ற கலெக்டரிடம் பா.ஜ., மனு
/
பாகிஸ்தானியரை வௌியேற்ற கலெக்டரிடம் பா.ஜ., மனு
ADDED : மே 08, 2025 01:27 AM

கடலுார்: கடலுார் மாவட்டத் தில் உள்ள பாகிஸ்தானியர்களை கண்டறிந்து வெளியேற்ற வலியுறுத்தி, கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் தமிழழகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மனு அளித்தார்.
மனு விபரம்: காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
உள்துறை அமைச்சகத்தின் ஆணையின் படி மாவட்டத்தில் உரியஆவணங்கள் இல்லாதவர்கள், காலாவதியான விசாக்கள் வைத்திருப்பவர்கள் அல்லது விசாக்கள் இடை நிறுத்தப்பட்ட பாகிஸ்தானியர்களையும் அடையாளம் காண வேண்டும். அந்த நபர்களை பட்டியலிட்டு, வெளியேற்றுவதற்கான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

