/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.25 லட்சத்தில் குளியலறை
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.25 லட்சத்தில் குளியலறை
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.25 லட்சத்தில் குளியலறை
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.25 லட்சத்தில் குளியலறை
ADDED : பிப் 09, 2024 06:49 AM

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, ரூ.25 லட்சத்தில் குளியலறையுடன் கூடிய சுகாதார கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
விருத்தாசலம் அரிமா சங்க பொன்விழா ஆண்டையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவில் எதிரில், பக்தர்கள் நலன் கருதி, ரூ.25 லட்சம் மதிப்பில் நவீன குளியலறை, கழிவறை அடங்கிய சுகாதார கட்டடம் கட்டுப்படுகிறது. அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் தலைமை தாங்கி, பணியை துவக்கி வைத்தார்.
முன்னாள் தலைவர் அருள், முன்னாள் செயலாளர் சந்திரசேகர், முன்னாள் பொருளாளர் முத்து நாராயணன் முன்னிலை வகித்தனர். செயலாளர் கண்ணகி, பொருளாளர் பாலு, நிர்வாகிகள் சண்முகம், ஜெய்சங்கர், சபாநாதன், ராஜகோபால், குமரேசன், வெங்கடாஜலபதி, தமிழ்மணி, அம்பலநாதன், நடேசன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.