
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி, :புவனகிரி அங்காளம்மன் கோவிலில் நேற்று மாலை மயான சூறை நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் 7ம் தேதி துவங்கியது. 8ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், உச்சிக்கப்பரை, சக்தி கரக நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை சுவேத நதியில் இருந்து ஏராளமானவர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, மாலை மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இரவு சாமி வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் ரத்தினசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

