/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை அரிமா சங்கத்தின் முப்பெரும் சேவை திட்ட விழா
/
விருதை அரிமா சங்கத்தின் முப்பெரும் சேவை திட்ட விழா
விருதை அரிமா சங்கத்தின் முப்பெரும் சேவை திட்ட விழா
விருதை அரிமா சங்கத்தின் முப்பெரும் சேவை திட்ட விழா
ADDED : அக் 03, 2024 11:26 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், அரிமா சங்கம் விருத்தாசலம் ஹோஸ்ட் சார்பில், முப்பெரும் சேவை திட்ட விழா கொண்டாடப்பட்டது.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில், துாய்மை இந்தியா திட்ட சேவை பணி நடந்தது. சங்க தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார்.
ரயில் நிலைய மேலாளர் சுனில்குமார், முதன்மை சுகாதார ஆய்வாளர் வசந்த், எஸ்.ஆர்.எம்.யூ., செய லாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
செயலாளர்கள் முத்து நாராயணன், கே.எஸ்.ஆர்., பொறியாளர் ரஞ்சித் வரவேற்றனர்.
ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரேஷ்சந்த் ஆகியோர் துாய்மை பணியை துவக்கி வைத்து, ரயில் நிலையத்திற்கு குப்பை தொட்டி வழங்கினர்.
வர்த்தகர் சங்க தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகமது, மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், மாநில துணைத் தலைவர் பழமலை, முன்னாள் தலைவர் ஷண்முகம், ஹோட்டல் சங்க நிர்வாகிகள், காய்கனி மார்க்கெட் நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொருளாளர் ரகுராமன் நன்றி கூறினார்.

