ADDED : மார் 11, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைப் போட்டிகள் நடந்தது.
கடலுார் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் 9 மற்றும் 10ம் தேதி நாட்கள் கலைப் போட்டி நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதில், பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

