/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அப்பரண்டிஸ் தேர்வு முகாம்: கடலுாரில் 15ம் தேதி ஏற்பாடு
/
அப்பரண்டிஸ் தேர்வு முகாம்: கடலுாரில் 15ம் தேதி ஏற்பாடு
அப்பரண்டிஸ் தேர்வு முகாம்: கடலுாரில் 15ம் தேதி ஏற்பாடு
அப்பரண்டிஸ் தேர்வு முகாம்: கடலுாரில் 15ம் தேதி ஏற்பாடு
ADDED : ஏப் 06, 2025 06:42 AM
கடலுார்: கடலுாரில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 15ம் தேதி நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் (அப்பரண்டிஸ்ஷிப்) சேர்க்கை முகாம் கடலுார் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் வரும் 15ம் தேதி நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 100க்கும் மேற்பட்ட அப்பரண்டிஸ் (தொழிற்பழகுநர்) தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சியின் போது மாதாந்திர உதவித் தொகை 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வழங்கப்படும். ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் முகாமில் பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், உதவி இயக்குனரை நேரிலோ அல்லது 94990 55861 - 99943 96444 ஆகிய மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

