/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பன்றி பிடித்ததால் ஆத்திரம் மாநகராட்சி வாகனம் உடைப்பு
/
பன்றி பிடித்ததால் ஆத்திரம் மாநகராட்சி வாகனம் உடைப்பு
பன்றி பிடித்ததால் ஆத்திரம் மாநகராட்சி வாகனம் உடைப்பு
பன்றி பிடித்ததால் ஆத்திரம் மாநகராட்சி வாகனம் உடைப்பு
ADDED : டிச 25, 2024 08:41 AM
கடலுார்: கடலுாரில் பன்றிகளை பிடிக்க வந்த மாநகராட்சி வாகனத்தின் கண்ணாடியை இரண்டு சிறுவர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பகுதிகளில் பன்றிகள் சுற்றித்திரிவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க. மாநகராட்சி அலுவலர் சுஜாதா தலைமையில் பன்றிகளை ஊழியர்கள் பிடித்தனர்.
அப்போது, கூத்தப்பாக்கம் ரங்கநாதன் நகரைச் சேர்ந்த பழனி என்பவரின் பன்றிகளைப் பிடிக்கச் சென்றனர். மாநகராட்சி ஊழியர்களிடம் பழனி பன்றிகளை பிடிக்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பழனியின் 16 மற்றும் 14 வயது மகன்கள் பன்றிகளை பிடிக்க வந்த மாநகராட்சி வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.
தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் பிடித்து விசாரித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.