/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீசை பட்டாக்கத்தியால் தாக்க முயற்சி பண்ருட்டி அருகே தப்பிய கும்பலுக்கு வலை
/
போலீசை பட்டாக்கத்தியால் தாக்க முயற்சி பண்ருட்டி அருகே தப்பிய கும்பலுக்கு வலை
போலீசை பட்டாக்கத்தியால் தாக்க முயற்சி பண்ருட்டி அருகே தப்பிய கும்பலுக்கு வலை
போலீசை பட்டாக்கத்தியால் தாக்க முயற்சி பண்ருட்டி அருகே தப்பிய கும்பலுக்கு வலை
ADDED : மார் 03, 2024 05:01 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே வாகன சோதனை மேற்கொண்ட போலீசாரை பட்டாக்கத்தியால் தாக்க முயன்ற கும்பல் காரை விட்டுவிட்டு நகை மற்றும் பணப்பையுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சித்திரைச்சாவடியில் வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் நேற்று பகல் 12:30 மணியளவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த டி.என்.11-ஏ.இசட் 6537 என்ற பதிவெண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரை போலீஸ்காரர் ராமசந்திரன் நிறுத்தி சோதனை செய்தார். காரில் பெரிய பையில் நகைகள், பணம் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடன், காரில் இருந்த நபர், போலீஸ்காரர் ராமச்சந்திரன் மீது பட்டாக்கத்தியை வீசினார். அதனைக் கண்ட போலீஸ்காரர் சாதுரியமாக நகர்ந்து கொண்டார். இதனைக் கண்ட அவ்வழியே சென்ற மக்கள் கூச்சலிட்டனர்.
உடன் காரில் இருந்த 4 பேரும், நகை மற்றும் பணம் இருந்த பைகளை எடுத்துக் கொண்டு வயல்வெளி வழியாக தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எழில்தாசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். காரின் பதிவெண்ணை ஆய்வு செய்ததில், அது போலி என்பதும், காரில் மேலும் 4 நெம்பர் பிளேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தப்பியோடிய கும்பல் தென்மாவட்டத்தில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு சென்னைக்கு சென்றிருக்கலாம் என தெரிய வருகிறது. அதனையொட்டி தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

