/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் ஜூடோ கராத்தே பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம்
/
கடலுார் ஜூடோ கராத்தே பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம்
ADDED : செப் 18, 2024 09:51 PM

திட்டக்குடி: கடலுார் விஜயராஜா அகாடமியை சேர்ந்த பயிற்றுனர்கள் நான்கு பேருக்கு, இந்திய ஜூடோ கூட்டமைப்பு சார்பில் ஷோ-டான் பிளாக் பெல்ட் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கடலுாரைச் சேர்ந்த விஜயராஜா யோகா மற்றும் தற்காப்புக்கலை அகாடமியை சேர்ந்த ராஜகோபாலன், அருள்ஜோதி, சத்தியராஜா, ஸ்ரீகாந்த், கவினா, செந்தில் ஆகியோர், 2023டிசம்பர் மாதம் கேரளாவில் இந்திய ஜூடோ கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஜூடோ பிளாக் பெல்ட்டிற்கான தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 6 பேர் உட்பட 84பேருக்கு, தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜூடோ பிளாக் பெல்ட மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதன் மூலம் அவர்கள், மாநில அளவில் ஜூடோ பயிற்சியாளராக அங்கீகாரம் பெற்றனர்.

