/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
9 தொகுதி வாக்காளர்கள் 19,46,759 பேர் ஓட்டுச்சாவடி மையங்கள் 2590 ஆக உயர்வு
/
9 தொகுதி வாக்காளர்கள் 19,46,759 பேர் ஓட்டுச்சாவடி மையங்கள் 2590 ஆக உயர்வு
9 தொகுதி வாக்காளர்கள் 19,46,759 பேர் ஓட்டுச்சாவடி மையங்கள் 2590 ஆக உயர்வு
9 தொகுதி வாக்காளர்கள் 19,46,759 பேர் ஓட்டுச்சாவடி மையங்கள் 2590 ஆக உயர்வு
ADDED : டிச 22, 2025 05:40 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முதற்கட்ட பணி கடந்த, அக்.27 ம் தேதி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களுக்கு, ஆண்கள் 10 லட்சத்து, 75 ஆயிரத்து, 229; பெண்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து, 18; மூன்றாம் பாலினத்தவர் 330; என, மொத்தம் 21 லட்சத்து, 93 ஆயிரத்து, 577 கணக்கீட்டுப் படிவம் கடந்த நவ.4,ம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
தற்போது, கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து ஆண்கள் 9 லட்சத்து, 60 ஆயிரத்து, 645, பெண்கள் 9 லட்சத்து, 85 ஆயிரத்து, 832, மூன்றாம் பாலித்தனவர் 282, என மொத்தம் 19 லட்சத்து, 46 ஆயிரத்து, 759 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முகவரியில் இல்லாதவர்கள் 38 ஆயிரத்து, 081; நிரந்தரமாக குடியிருப்பு மாறியவர்கள் 1 லட்சத்து, 8 ஆயிரத்து, 531; இறந்தவர்கள் 88 ஆயிரத்து, 972; இரட்டைப் பதிவு உள்ளவர்கள் 10 ஆயிரத்து, 844; இதர வாக்காளர்கள் 390 ஆக மொத்தம் 2 லட்சத்து, 46 ஆயிரத்து, 818 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் ஆட்சேபனை மற்றும் உரிமை கோரல் காலத்தில், வரும், 2026ம் ஆண்டு, ஜன.18 ம் தேதி வரை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து வரும், பிப்.17 ம் தேதி வெளியாக உள்ள, இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்து கொள்ளலாம்.
மேலும், மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து, முன்னர் 2313 ஆக இருந்த ஓட்டுச்சாவடிகள், 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களை பிரித்தல் மற்றும் முன்னரே அமைந்துள்ள ஓட்டுச்சாவடிகள் தேவையின் அடிப்படையில் இடமாற்றம் , கட்டட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்து ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 2,590 ஓட்டுச்சாவடிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

