/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே கேட் இரும்பு சங்கிலி அறுந்து விழுந்து 7 பேர் காயம்
/
ரயில்வே கேட் இரும்பு சங்கிலி அறுந்து விழுந்து 7 பேர் காயம்
ரயில்வே கேட் இரும்பு சங்கிலி அறுந்து விழுந்து 7 பேர் காயம்
ரயில்வே கேட் இரும்பு சங்கிலி அறுந்து விழுந்து 7 பேர் காயம்
ADDED : ஏப் 10, 2025 01:49 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ரயில்வே கேட்டில் இரும்பு சங்கிலி அறுந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் இடத்தில் ரயில்வே கேட் உள்ளது.இந்த கேட்டின் கீழே இடைவெளி இருந்தது.கடந்த வாரம் ரயில் வரும் நேரம் கேட் போட்டிருந்தனர்.
அப்போது கீழ்பாதியை சேர்ந்த நாகமணி சைக்கிளை தள்ளி கொண்டு கேட்டை கடக்க முயன்றபோது ரயிலில் அடிப்பட்டு இறந்தார்.இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அவசரமாக கேட்டின் கீழே கம்பி பொறுத்தி இரும்பு சங்கிலி கட்டினர்.
நேற்று மதியம் 11.10 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ரயில் வந்ததால் கேட் போட்டிருந்தனர்.ரயில் சென்றவுடன் கேட்டை திறக்கும் போது அதில் கட்டியிருந்த கம்பி மற்றும் இரும்பு செயின் அறுந்து விழுந்தது.அங்கு காத்திருந்த மேல்பாதி காளியம்மாள்,70 உட்பட 7 பேர் மீது சங்கிலி விழுந்ததால் காயமடைந்தனர்.