/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் 36 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்
/
விருத்தாசலத்தில் 36 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்
விருத்தாசலத்தில் 36 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்
விருத்தாசலத்தில் 36 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்
ADDED : அக் 31, 2024 12:32 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் நகராட்சியில் பகுதியில் உள்ள 36 முக்கிய இடங்களில், போலீசார் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி, குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து வருகின்றனர்.
விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள், செராமிக் தொழிற்பேட்டை, மருத்துவமனை, மார்க்கெட் கமிட்டி, ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்டவைகள் உள்ளன.
விருத்தாசலம் நகரத்தில் பைக் திருட்டு, வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.நாள் ஒன்றுக்கு சராசரியாக 2க்கும் மேற்பட்ட பைக்குகளை மர்மநபர்கள் திருடிச் செல்கின்றனர்.
இதனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆதாரங்களை திரட்ட முடியாததால், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில், விருத்தாசலம் போலீசார் சார்பில், கடைவீதி, பாலக்கரை, காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டேண்ட், ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொன்னேரி, சித்தலுார், காட்டுக்கூடலுார், மணவாளநல்லுார் பகுதிகளில் உள்ள புறவழிச்சாலை என நகரின் 24 இடங்களில் போலீசார் சார்பிலும், நகராட்சி சார்பில் 12 இடங்களிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு கூறுகையில், விருத்தாசலம் நகரம் முமுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டிந்த சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதடைந்திருந்தன.
குற்ற செயல்களை தடுக்கும் விதமாக, பழுதடைந்த சி.சி.டி.வி., கேமராக்களை சீரமைத்துள்ளோம். இதனால், குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சம் ஏற்படும். மேலும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிக்க உதவும் என்றார்.

