/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
333 கிலோ குட்கா கடத்தல் பண்ருட்டியில் 2 பேர் கைது
/
333 கிலோ குட்கா கடத்தல் பண்ருட்டியில் 2 பேர் கைது
333 கிலோ குட்கா கடத்தல் பண்ருட்டியில் 2 பேர் கைது
333 கிலோ குட்கா கடத்தல் பண்ருட்டியில் 2 பேர் கைது
ADDED : டிச 20, 2025 07:18 AM

பண்ருட்டி: பெங்களூருவில் இருந்து 333 கிலோ குட்கா காரில் கடத்தி வந்த இருவரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5:30 மணியளவில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த காரை சோதனை செய்ததில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் இருந்த விழுப்புரம் மாவட்டம், சாலமேடு, கவுதம் நகர், காஜாமைதீன் மகன் முகமது பாசில்,35; நாமக்கல் மாவட்டம், தேவனாங்குறிச்சி முருகேசன் மகன் கோபாலகிருஷ்ணன்,39; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், காரில் இருந்த 248 கிலோ ஹான்ஸ், கூலிப் 18 கிலோ, விமல் பாக்கு 11 கிலோ, வி1 ஜர்தா பாக்கு 56 கிலோ என, 333 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., ராஜா ஆகியோர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

