sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இளைஞர்கள் பங்கேற்கலாம்

/

திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இளைஞர்கள் பங்கேற்கலாம்

திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இளைஞர்கள் பங்கேற்கலாம்

திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இளைஞர்கள் பங்கேற்கலாம்


ADDED : மார் 06, 2025 01:55 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிதம்பரத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் 9ம் தேதி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியின இளைஞர்களுக்கு முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிடும் பொருட்டு, திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் வரும் 9ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரையில், அண்ணாமலை பல்கலை., வளாகத்தில் நடத்தப்படுகிறது.

பங்கேற்க, 18 முதல் 33 வயதிற்குட்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ்2, தொழிற்பயிற்சி பட்டயப்படிப்பு, இளங்கலை படிப்பு, முடித்த பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வி சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, 3 பாஸ்போட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தொடர்புடைய வருவாய் தாசில்தாரிடம் அளிக்க வேண்டும். இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us