/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெட்ரோல் பங்க் ஊழியரைதாக்கியவர்களுக்கு வலை
/
பெட்ரோல் பங்க் ஊழியரைதாக்கியவர்களுக்கு வலை
ADDED : ஏப் 22, 2024 05:57 AM
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் பெட்ரோலுக்கு பணம் தர மறுத்து பங்க் ஊழியர் மற்றும் தட்டிக்கேட்டவரை தாக்கிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் செம்பியன், 54. தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகி. இவர் மேற்கு மெயின்ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். கடந்த 19ம்தேதி பகல் 2:00 மணியளவில் பெட்ரோல் பங்கிற்கு பைக்கில் வந்த இருவர் அங்கு பணிபுரிந்த ஒருவரிடம் 410 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு கூறினார். பெட்ரோல் போட்டு விட்டு ஊழியர் பணம் கேட்டார். அதற்கு அவர்கள் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆத்திரமடைந்த பைக்கில் வந்தவர்கள் பங்க் ஊழியர் மற்றும் தட்டிக்கேட்டவர்களை திட்டி, தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து செம்பியன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

