/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைப்பு
ADDED : மார் 24, 2024 04:41 AM

வடலுார்: குறிஞ்சிப்பாடி தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி, குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 259 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த 310 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலக வளாகத்திற்கு வந்தது.
தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி தலைமையில், தாசில்தார் அசோகன் மற்றும் அனைத்து கட்சி நிா்வாகிகள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் முன்னிலையில் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னர், அந்த அறையை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சீல் வைத்தார்.

