/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இயந்திரம் பழுதானதால் இரவு 7 மணிக்கு மேலும் வரிசையில் காத்திருந்து ஓட்டுபோட்ட வாக்காளர்கள்

ADDED : ஏப் 20, 2024 05:50 AM

நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் , வான்பாக்கம் ஓட்டுச்சாவடியில் இயந்திர பழுதால் 1 மணி நேரம் தாமதமாக வாக்குபதிவு துவங்கியதால் மாலை 7 வரை 150க்கு க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்து ஓட்டுப்பபோட்டனர்.
கடலூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் 17 இடங்களில் 38 பூத்களில் நேற்று வாக்குபதிவு நடந்தது.வான்பாக்கம் 51 வது பூத்தில் 1565 வாக்காளர்கள் ஓட்டளிக்கவேண்டும். அங்கு காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குவதற்காக அரசியல் கட்சியினரின் பூத் ஏஜென்ட்கள் வந்திருந்தனர்.ஏழு மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியவுடன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
ஒரு ஓட்டு கூட பதிவாகாத நிலையில் ஓட்டுப்போட வந்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் நிலவியது. உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாக்காளர்களை சமாதானம் செய்தனர்.
இன்ஜியர்கள் வந்து இயந்திரத்தை சரி செய்த பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு வாக்குபதிவு துவங்கியது. அந்த ஓட்டுச்சாவடியில் வழக்கமாக 2 இயந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு நடக்கும்.
இம்முறை ஒரு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தபட்டதாலும் வாக்குபதிவு துவங்க ஒரு மணி நேரம் காலதாமதம் ஆனதாலும் வாக்குபதிவு முடியும் நேரமான 6 மணிக்கு பிறகும் 150 க்கும் மேற்பட்டவர்கள் ஓட்டு போட வரிசையில் காத்திருந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டளித்தனர். இவர்கள் 7 மணிக்கு மேல் வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டு சென்றனர்.