/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூத் சிலிப் வழங்குவோருக்கு பயிற்சி
/
பூத் சிலிப் வழங்குவோருக்கு பயிற்சி
ADDED : ஏப் 02, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
தேர்தல் அலுவலர் கிருஷ்ணராஜன் பயிற்சி அளித்தார். அப்போது, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியின் நடைமுறைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது. அப்போது, பூத் சிலிப்பை வாக்காளர்களிடம் நேரடியாக வழங்க வேண்டும். இதில் புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், புதிய வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். அனைவரும் ஓட்டு போட செய்வதை உறுதிபடுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.

