/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரு இடங்களில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
/
இரு இடங்களில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
இரு இடங்களில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
இரு இடங்களில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 26, 2024 04:30 AM

பரங்கிப்பேட்டை: பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நேற்று பரங்கிப்பேட்டையில் இரு இடங்களில் திடீரென மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, பரங்கிப்பேட்டை அகரம் சேவாமந்திர் வீரப்பன் பார்க் அருகே இருந்த வாகை மரம் சாலையில் சாய்ந்தது.
அதேபோல், அருணாச்சல முதலியார் தெருவில் ஹோட்டல் பக்கத்தில் இருந்த தென்னை மரம் ஹோட்டல், மின்சார கம்பம் மீது சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், இரு இடங்களிலும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
மின்சார கம்பத்தில் ஒயர்கள் அறுந்து சாலையில் தொங்கியது. காற்று அடிக்கும்போது மின்நிறுத்தம் செய்யப்பட்டதால், பாதிப்பும் இல்லை.
தகவலறிந்த, பரங்கிப்பேட்டை பேரூராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்திற்கு இடையூராக சாலையில் விழுந்த கிடந்த மரங்களை மிஷின் மூலம் வெட்டி அகற்றினர். அதன் பிறகு அனைத்து வாகனங்களும் சென்றது.

