/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்.,வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
/
காங்.,வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 13, 2024 05:24 AM

சிறுபாக்கம்: கடலுார் லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து, அமைச்சர் கணேசன் பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட மீனவர் தெரு, செம்பேரி சாலை, கிழக்கு மெயின்ரோடு, வால்பட்டறை, தெற்குரத வீதி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட 15 வார்டுகளில் நேற்று மாலை அமைச்சர் கணேசன் மற்றும் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர் பேசுகையில், 'காங், வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட தி.மு.க., அரசின் 3 ஆண்டுகால சாதனை அவரை வெற்றி பெறச்செய்யும்.
பெண்ணாடம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். வெலிங்டன் நீர்தேக்க கால்வாய்கள் துார்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் கொண்டு வரப்படும்' என்றார்.
விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், தி.மு.க., நகர செயலாளர் குமரவேல், ஒன்றிய செயலாளர் தியாகராஜன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செம்பியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி கோனுார் மதியழகன்.
அவைத் தலைவர் ஜெயராமன், ஒன்றிய நிர்வாகிகள் தொளார் ராஜேந்திரன், கூடலுார் ஜெயராமன், அருகேரி வேல்முருகன், இளவரசன், விருத்தகிரி, த.வா.க., நிர்வாகிகள் ஆதமங்கலம் சங்கர், உலகநாதன், தங்கவேல்.
வி.சி., ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், ஆனந்தன், நகர செயலாளர் ஆற்றலரசு, காங்., வட்டார தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் வீரப்பன், பொன்னுசாமி, பெலாந்துறை காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

