/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறந்தவர்களுக்கு வழங்கிய பூத் சிலிப் திரும்ப பெறப்பட்டது
/
இறந்தவர்களுக்கு வழங்கிய பூத் சிலிப் திரும்ப பெறப்பட்டது
இறந்தவர்களுக்கு வழங்கிய பூத் சிலிப் திரும்ப பெறப்பட்டது
இறந்தவர்களுக்கு வழங்கிய பூத் சிலிப் திரும்ப பெறப்பட்டது
ADDED : ஏப் 15, 2024 03:59 AM
நெல்லிக்குப்பம்: 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக இறந்தவர்களுக்கு வழங்கிய பூத் சிலிப் திரும்ப பெறப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சி, கந்தசாமி தெருவில் வசித்த பக்கரிசாமி மனைவி மேனகா என்பவர் இறந்து 5 ஆண்டுகளாகிறது.
அதே தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ரவி இறந்து ஓராண்டு ஆகிறது. இருவருக்கும் அவரது குடும்பத்தினர் நகராட்சியில் இறப்பு பதிவு செய்து, சான்று வாங்கியுள்ளனர்.
ஆனால் இவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படவில்லை.
இறந்த இருவருக்கும் நகராட்சி ஊழியர்கள் பூத் சிலிப் வழங்கினர். இதனை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதையடுத்து, கமிஷ்னர் கிருஷ்ணராஜன் உத்தரவின்பேரில், நகராட்சி ஊழியர்கள் இறந்தவர்களுக்கு வழங்கிய பூத் சிலிப்களை, அவரது குடும்பத்தினரிடமிருந்து திரும்ப பெற்றனர்.