/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு
/
புவனகிரியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு
ADDED : மே 16, 2024 11:24 PM
புவனகிரி: புவனகிரி பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பட்டால், முதல் பட்டதாரி சான்று வாங்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புவனகிரியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் முத்திரைத்தாள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மின்துறை அலுவலகத்தில் நுகர்வோர் உறுதி மொழி ஆவணம் செலுத்தவும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் கல்லுாரியில் சேர முதல் பட்டதாரி சான்றிதழ் பெறவும் முத்திரைத்தாள் தேவைப்படுகிறது.
ஆனால், புவனகிரி பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, புவனகிரியில் முத்திரைத்தாள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

