ADDED : ஏப் 09, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: திருவருள் இறைப்பணி மன்றம் சார்பில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடந்தது.
புவனகிரியில் மாதம் தோறும் இறைப்பணி மன்றம் சார்பில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. மன்ற செயலர் முருகன் வரவேற்றர்.
சிதம்பரம் தில்லை தமிழ்ச்சங்க செயலாளர் புலவர் மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 'கலிக்கம்ப நாயனார்' குறித்து சொற்பொழிவாற்றினார்.
ஏற்பாடுகளை இறைப்பணி மன்ற நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

