/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் தேரோட்டம்
/
சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் தேரோட்டம்
ADDED : மார் 24, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது.
கோவிலில், பங்குனி உத்திர விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும், வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நேற்று தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி சுவாமிக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து, தேரில் எழுந்தருளச் செய்து, 8:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

