/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : மே 21, 2024 05:19 AM
பெண்ணாடம்: பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் - திட்டக்குடி சாலை மார்க்கத்தில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக பஸ், லாரி, வேன், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன.
அதில், பெ.பொன்னேரி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகனங்கள் மெதுவாகச் செல்ல நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால் வாகன விபத்துகள், உயிரிழப்பு ஓரளவுக்கு குறைந்தது.
கடந்தாண்டு மேம்பாலம் முகப்பில் ரவுண்டானா அமைக்கும்போது, வேகத்தடை அகற்றப்பட்டன. ஆனால் ரவுண்டானாவில் ைஹமாஸ் விளக்கும் அமைக்கவில்லை. வேகத்தடையும் இல்லை. இதனால் கனரக வாகனங்கள் உட்பட இவ்வழியே செல்லும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்பும் தொடர்கின்றன.
எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன்கருதி, பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

