/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலாவதியான குளிர்பானங்கள்; அள்ளிச்சென்ற பொதுமக்கள்
/
காலாவதியான குளிர்பானங்கள்; அள்ளிச்சென்ற பொதுமக்கள்
காலாவதியான குளிர்பானங்கள்; அள்ளிச்சென்ற பொதுமக்கள்
காலாவதியான குளிர்பானங்கள்; அள்ளிச்சென்ற பொதுமக்கள்
ADDED : மார் 28, 2024 04:36 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே சாலையோரத்தில் வீசப்பட்ட காலாவதி குளிர்பானங்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் உள்ள தனியார் கட்டடத்தில், குளிர்பான கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு புகழ்பெற்ற நிறுவனங்களின் குளிர்பானங்களை இறக்குமதி செய்து, சுற்றியுள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாதக்கணக்கில் விற்பனையாகாத காலாவதியான குளிர்பானங்கள், கிடங்குக்கு அருகே சாலையோரம் மூட்டை மூட்டையாக வீசப்பட்டன. குவிந்து கிடந்த குளிர்பானங்களை விபரம் அறியாத அப்பகுதி மக்கள் அள்ளிச்சென்றனர். இவற்றை பருகும் குழந்தைகள், முதியோருக்கு வாந்தி பேதி போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, காலாவதியான குளிர்பானங்களை பருகிய நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இவற்றை உரிய வழிகாட்டுதலின்படி அழிக்காமல், சாலையில் வீசியவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

