/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூத் சிலீப் எழுதி கொடுத்தவர்களை விரட்டியதால் போலீசார், பா.ஜ., நிர்வாகிகள் தள்ளு முள்ளு இந்து முன்னணி நிர்வாகிக்கு சிகிச்சை

ADDED : ஏப் 20, 2024 05:51 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே ஓட்டுச்சாவடி அருகே பூத் சிலீப் எழுதிகொடுத்திருந்த பா.ஜ., மற்றும் இந்து முன்னனி நிர்வாகிகளை போலீசார் விரட்டியதால், பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் போலீசார் இடையே தள்ளூ, முள்ளூ ஏற்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிப்பேட்டை அடுத்த அரிய கோஷ்டி கிராமத்தில் நேற்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பூத் எண் 35, 36 ல் ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை 4;00 மணியளவில், பா.ஜ., கட்சியினர், ஹரி பிள்ளையார் கோயில் அருகே வாக்காளர்களுக்கு பூத் சிலிப் எழுதிகொடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமைலான போலீசார், பா.ஜ., நிர்வாகிளை விரட்டி, அவர்கள் உட்கார்ந்திருந்த சேர்களை போலீசார் எடுத்துச்சென்று வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது, அரியகோஷ்டி கிராமத்தில் வாடகை பாத்திரக்கடை வைத்துள்ள பரங்கிப்பேட்டை ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளர் மாணிக்கம், 36; என்பவர், போலீசாரிடம், சேர்களை நான் வாடகைக்கு கொடுத்துள்ளேன்.
சேர்களை என்னிடம் கொடுங்கள் என கூறியுள்ளார். இதனால் மாணிக்கத்தை, போலீசார் வேனில் ஏற்ற முயன்றனர். உடன் அப்பகுதியை சேர்ந்தவர்கள், பா.ஜ., இந்து முன்னனி நிர்வாகிகள், மாணிக்கத்தை போலீஸ் வாகனத்தில் ஏற்றக்கூடாது என தடுத்ததால், போலீசுார் மற்றும் பா.ஜ., நிர்வாகிகளுக்கு இடையே தள்ளூ, முள்ளூ ஏற்பட்டது. இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் சிலர், ஓட்டுச்சாவடியை பூட்டினர். பூத்தில் பூட்டியிருந்த பூட்டை பொதுமக்கள் உடைத்து திறந்துவிட்டனர். அதன் பிறகு ஓட்டுப்பதிவு நடந்தது.
இதனால், ஓட்டுப்பதிவு அரை மணி நேரம் தடைப்பட்டது. பின்னர் போலீசார், மாணிக்கத்தை விட்டுச்சென்றனர்.
போலீஸ் தாக்கியதில், காயமடைந்த மாணிக்கம் ஆம்புலன்ஸ் மூலம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் அப்பகுதியில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.