/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிழற்குடை இல்லாமல் பயணிகள் தவிப்பு
/
நிழற்குடை இல்லாமல் பயணிகள் தவிப்பு
ADDED : மே 02, 2024 12:18 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடைவீதியில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதற்காக, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மந்தாரக்குப்பம் பகுதியில் சாலையோர பழமையான மரங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டன. அதில், மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் முதல் ரோமாபுரி வரை 5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு, தற்போது மேலும் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
மந்தாரக்குப்பம் கடை வீதியில் பயணியர் நிழற்குடை அகற்றப்பட்ட பிறகு மீண்டும் அமைக்கப்படாததால், பெண்கள், முதியவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். வெயில் கொடுமையால் அருகில் உள்ள கடைகளின் ஓரமாக, பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், மந்தாரக்குப்பம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் கெங்கைகொண்டான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துணியால் நிழல் பந்தல் தற்காலிமாக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே மந்தாரக்குப்பம் கடை வீதியில் பஸ் நிறுத்த பகுதிகளில் நிழற்குடை அமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

