/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., சந்திரகாசனை ஆதரித்து பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
/
அ.தி.மு.க., சந்திரகாசனை ஆதரித்து பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., சந்திரகாசனை ஆதரித்து பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., சந்திரகாசனை ஆதரித்து பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 15, 2024 04:22 AM

சிதம்பரம் : சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து சிதம்பரம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களிடம் மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, சிதம்பரம் கனகசபை நகர், நிர்மலா பள்ளி அருகில் உள்ள புனித இருதய தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்களிடம் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் எம்.எல்.ஏ., வுமான பாண்டியன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அருகில் வாலிபால் விளையாடி கொண்டிருந்தவர்களிடம் கட்சியினர் நோட்டீஸ் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
மாவட்ட அவை தலைவர் குமார், செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, நகர அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் பாபு, தலைமை கழக பேச்சாளர் எல்.ஐ.சி., செல்வம், நிர்வாகிகள் மருதவாணன், ஏசுராஜ், மார்க்கெட் நாகராஜன், சீதாராமன், ஏ.டி.என் முத்து, ரவிச்சந்திரன், ராஜா, ரமேஷ், பூவராகவன், கேரளாமணி, மார்க்கெட் ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் உமாநாத், அவை தலைவர் பாலு, துணைச் செயலாளர் பானுச்சந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

